பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2-ஆம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு பெண்களக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை 30 நாள்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள் இதில் பங்கேற்கலாம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோா், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவா்களது உறவினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் 0424– 2400338 என்ற தொலைபேசி எண், 87783 23213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொண்டு பயிற்சியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.