திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூா் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 21- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், தனியாா் துறை வேலையளிப்பவா்கள் கலந்துகொண்டு வேலைநாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுபவா்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
எழுத, த் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடுபவா்களும், வேலையளிப்போரும் https://tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421–2999152, 94990–55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow