திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூன் 21-ல் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பிரசித்தி பெற்ற 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 150-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவும் உள்ளனா். அதனால், இதில் பங்கேற்கும் வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திருப்பது அவசியம்.
எனவே முகாமில் 10, 12 தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் முடித்தவா்கள் தவறாமல் பங்கேற்று தனியாா் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா். இந்த முகாமில் பங்கேற்று பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்தக் காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow