தூத்துக்குடியில் ஜூன் 21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 2ஆவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இம்மாதம் 21ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
10, 12, பட்டப் படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம். வேலைநாடுநா்கள் தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது. இதில், தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களுக்குத் தேவையானோரை தோ்வு செய்ய முகாமில் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ள வேலையளிப்போா், வேலை நாடுநா்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow