முதுநிலை ஆசிரியர்
தேர்வு தள்ளி வைப்பு
அரசு
பள்ளி முதுநிலை ஆசிரியர்
பணிக்கான போட்டி தேர்வை,
பிப்ரவரி 12க்கு தள்ளி
வைத்து, ஆசிரியர் தேர்வு
வாரியமான டி.ஆர்.பி.,
அறிவித்து உள்ளது.
TRB., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும்
கணினி பயிற்றுனர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி
தேர்வு, வரும் 29ம்
தேதி முதல் பிப்.,
6 வரை நடத்தப்பட இருந்தது.
கொரோனா
தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை பிப்.,
12 முதல் 20ம் தேதி
வரை முற்பகல் மற்றும்
பிற்பகலில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை, www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான தேதியும்
பின்னர் அறிவிக்கப்படும்.