சிவில் சர்வீசஸ்
முதல்நிலைத் தேர்வு இலவச
பயிற்சிக்கான நுழைவுத்
தேர்வு தள்ளிவைப்பு
சிவில்
சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு
இலவசப் பயிற்சிக்காக ஜனவரி
23ம் தேதி நடைபெற
இருந்த நுழைவுத் தேர்வு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில
இந்திய குடிமைப்பணி தேர்வு
பயிற்சி மையத்திலும், கோவை
மற்றும் மதுரையில் உள்ள
அண்ணா நூற்றாண்டு குடிமைப்
பணி தேர்வு பயிற்சி
நிலையங்களிலும் சிவில்
சர்வீசஸ் தேர்வுக்கு இலவசப்
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த
வகையில், 2022ம் ஆண்டு ஜூன்
மாதம் நடைபெற உள்ள
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
அளிப்பதற்கான நுழைவுத்
தேர்வு ஜனவரி 23ம்
தேதி 18 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு
8,704 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது
கரோனா வைரஸ் தொற்று
காரணமாக தமிழகம் முழுவதும்
ஜனவரி 31ம் தேதி
வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,
விண்ணப்பதாரர்களின் நலனைக்
கருத்தில் கொண்டு, நுழைவுத்
தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.
இது
தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற
இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும்
044 24621475 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.