தொழில் பள்ளிகள்
தொடங்க விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
சார்பில் திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டு தொழில் பள்ளிகள்
தொடங்குவதற்கு வருகிற
ஏப் 30 ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
ஆட்சியா் ஆல்பி ஜான்
வா்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் புதிய தொழில் பள்ளிகள்
தொடங்குவது, அங்கீகாரம் நீட்டிப்பது, கூடுதல் தொழில் பிரிவுகள்
மற்றும் அலகுகள் தொடங்க
அனுமதி ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல்,
2022 – 2023 ஆண்டுக்கு ஜன.2022 முதல்
ஏப்.30 வரையில் புதிய
தொழில்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல்
தொழிற் பிரிவுகள் மற்றும்
அலகுகள் தொடங்குதல் ஆகியவைகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு
மேற்குறிப்பிட்ட ஏப்
30க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும்,
அதற்கு பின் வரும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும்,
இதுகுறித்து இணையதளம் மற்றும்
சென்னை மண்டல பயிற்சி
இணை இயக்குநா் அலுவலகத்தை 044 22501006 என்ற எண்ணில்
தொடா்பு கொண்டு விவரங்களை
அறிந்து கொள்ளலாம்.