அஞ்சல் காப்பீடு
முகவர் பணிக்கு நேர்முகத்
தேர்வு
கோவை
அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல்
ஆயுள் காப்பீடு, கிராமிய
அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி
முகவர் மற்றும் கள
அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு, வரும்
28ம் தேதி நடக்கிறது.
கூட்செட்
ரோடு, கோவை தலைமை
அஞ்சல் நிலையம், கோட்ட
முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வில், 18 முதல் 50 வயதிற்குட்பட்ட, 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 65 வயதிற்குட்பட்ட மத்திய,
மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள், அதிகாரிகளும் கலந்து
கொள்ளலாம்.
தகுதியானவர்கள், விண்ணப்பம் மற்றும் தேவையான
சான்றிதழ்களுடன் ஜன.,28ம்
தேதி, காலை, 10 மணிக்கு
தலைமை அஞ்சல் நிலையம்
வர வேண்டும்.
விண்ணப்ப
படிவங்களை, அனைத்து அஞ்சல்
நிலையங்களில் இலவசமாகவும், docoimbatore.tn@indiapost.gov.in
என்ற இ–மெயில்
முகவரிக்கு, கோரிக்கை அனுப்புவதன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்
விபரங்களுக்கு 0422- 255 8541 என்ற
எண்ணை தொடர்பு கொள்ளலாம்.