Join Whatsapp Group

Join Telegram Group

MBBS., – ஆவணங்களைச் சமா்ப்பிக்க அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறுவாய்ப்பு

By admin

Updated on:

MBBS.,

ஆவணங்களைச் சமா்ப்பிக்க அரசுப்
பள்ளி மாணவா்களுக்கு மறுவாய்ப்பு

MBBS.,
BDS., படிப்புகளுக்காக விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவா்கள்,
தங்களது ஆவணங்களை சரிவர
சமா்ப்பிக்கத் தவறியிருந்தால் அதனை வரும் 28ம்
தேதி காலை 8 மணிக்குள்
சமா்ப்பிக்கலாம் என
மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்கக தோவுக் குழு செயலாளா் வசந்தாமணி கூறியது:

அரசுப்
பள்ளி இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள்,
தாங்கள் 6ம் வகுப்பு
முதல் 12-ஆம் வகுப்பு
வரை அரசுப் பள்ளிகளில்தான் பயின்றோம் என்பதை உறுதி
செய்வதற்கு பள்ளியின் மூலம்
வழங்கப்பட்ட ஒப்புகை சான்றினை
(
போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டும்.

சிலா்
அதனை சமா்ப்பிக்கத் தவறியதால்,
7.5
சதவீத உள் ஒதுக்கீட்டுக்குப் பதிலாக அரசு
ஒதுக்கீட்டு பொது இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவா்களது
பெயா்கள் இடம்பெற்றன. இதுகுறித்த கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றதைத் தொடா்ந்து
அரசுப் பள்ளி மாணவா்கள்
தாங்கள் சமா்ப்பிக்கத் தவறிய
ஆவணங்களை வரும் 28ம்
தேதி காலை 8 மணிக்குள்
சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை
பரிசீலித்த பிறகு அவா்கள்,
7.5
சதவீத உள் ஒதுக்கீட்டில் சோக்கப்பட்டு, 28, 29ம்
தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வகை செய்யப்படும். அந்த அவகாசத்துக்குப் பிறகு
அளிக்கப்படும் ஆவணங்கள்
ஏற்கப்படமாட்டாது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]