10,11,12-ம்
வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி சென்னை
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அரியலூர்
பள்ளி மாணவி தற்கொலை
செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக
இருந்தாலும் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுத்தரப்படும். மாணவி
படித்த பள்ளியில் மற்ற
மாணவர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளோம். அந்த
பள்ளியில் ஏற்கனவே படித்து
வெளியேறிய மாணவர்களிடமும் கருத்துகளை கேட்டுள்ளோம்.. வழக்கு
விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மாணவி
தற்கொலை விஷயத்தில் அரசியல்
செய்ய வேண்டாம். இனி
இதுபோன்ற சம்பவம் நடக்காத
வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.. பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டும் காரணத்தை
யாரும் விசாரணையில் சொல்லவில்லை. என்று தெரிவித்தார்.
பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற
கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஏப்ரல் மாத இறுதியில்
அல்லது மே மாதம்
என்பது இன்னும் இறுதி
செய்யப்படவில்லை.. ஆனால்
பொதுத்தேர்வு கட்டாயம்
நடைபெறும். 10,11,12-ம்
வகுப்பு பொதுத்தேர்வு மிகவும்
முக்கியம்.
எனவே
பாடங்களை கட்டாயம் நடத்தி
முடிக்க வேண்டிய சூழல்
உள்ளது. அரையாண்டு விடுமுறை,
பொங்கல் விடுமுறை, ஊரடங்கு
காரணமாக தொடர் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. எனினும்
ஏப்ரல் மாதமாக இருந்தாலும் அல்லது மே மாதமாக
இருந்தாலும் பொதுத்தேர்வு கட்டாயம்
நடைபெறும்
என்று தெரிவித்தார்.