மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச
வேலைவாய்ப்பு – மதுரை
மதுரை
கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டட வளாகத்திலுள்ள இலவச
திறன் மேம்பாட்டு பயிற்சி
மையம் இரு மாதங்களில் 105 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்
நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.
இம்மையத்தை கடந்த நவ.,ல்
கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி
வைத்தார். மையம் மூலம்
குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு
முறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் வேலைவாய்ப்பு அலுவலர்
கிருஷ்ணமூர்த்தி, வழிகாட்டுனர் நரேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து தருகின்றனர்.
15 மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பு பெற ஆலோசனை வழங்கப்பட்டு, கடனுதவி பெறவும் வழிகாட்டப்பட்டுள்ளது.
மேலும்
வேலைவாய்ப்புக்கு தயாராகும்
வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச
திறன் மேம்பாடு பயிற்சியும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் 89255 13704ல்
தொடர்பு கொள்ளலாம்.