கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
– திண்டுக்கல்
பிரதமர்
கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம்
கல்வியாண்டில் தொழிற்கல்வி, தொழில் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் ஆண் வாரிசுதார்களுக்கு ரூ.2,500,
பெண் வாரிசுகளுக்கு மாதம்
ரூ.3000 வழங்கப்படுகிறது.
இதனை
பெற www.ksb.gov.in என்ற
இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜன.31
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
பாரத ஸ்டேட் வங்கி,
பஞ்சாப் நேஷனல் பேங்க்
ஆகியவற்றில் தங்கள் பெயரில்
கணக்கு வைத்திருக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அந்த விவரங்களை,
முன்னாள் படைவீரர்நல உதவி
இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க
வேண்டும்.