காவலர் பணிக்கான
உடல் தகுதித் தேர்வு
19ஆம் தேதி முதல்
தொடக்கம்
– புதுச்சேரி
புதுச்சேரியில் காவலர் பணிக்கான உடல்
தகுதித் தேர்வு 19-ந்
தேதி தொடங்குகிறது. இதற்கான
அனுமதிச்சீட்டு நாளை
முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புதுச்சேரி டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ரே கூறியதாவது:
புதுச்சேரி காவல் துறையில் காலியாக
உள்ள காவலர் 390, ரேடியோ
டெக்னீசியன் 12 மற்றும் டெக்
ஹேண்டலர் 29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்காக
மொத்தம் 17 ஆயிரத்து 227 பேர்
விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் காவலர் பணிக்கு
13,970, ரேடியோ டெக்னீஷியன் 229, டெக்
ஹேண்ட்லர் 558 என 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
2,440 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த
நிலையில் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான
விண்ணப்பதாரர்களுக்கான உடல்
தகுதி தேர்வு மற்றும்
சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற
19ஆம் தேதி காலை
6 மணிக்கு கோரிமேடு காவலர்
பயிற்சி மைதானத்தில் தொடங்கி
20 நாட்கள் நடக்கிறது.
நாள்
ஒன்றுக்கு தேர்வில் கலந்துகொள்ள 750 பேர் அழைக்கப்படுவார்கள். இந்த
தேர்வு காலை 6, 8, 10 மணி
என 3 பிரிவுகளாக நடைபெறும்.
விண்ணப்பித்த அனைவரின்
பட்டியல், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் காரணம் ஆகியவை https://police.py.gov.in என்ற
காவல் துறை இணையதளத்தில் விண்ணப்பத்தாரரின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான
விண்ணப்பதாரர்கள் தங்களின்
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை முறையே
விண்ணப்பதாரரின் ஐ.டி.
மற்றும் பாஸ்வேர்டாக (கடவுச்சொல்) எடுத்துக்கொண்டு https://recruitment.py.gov.in என்ற
இணையதளத்தில் இருந்து
ஞாயிற்றுக்கிழமை காலை
10 மணி முதல் தங்களின்
அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது
கொரோனா பெருந்தோற்று காலம்
என்பதால் தேர்வுக்கு வரும்
அனைவரும் கண்டிப்பாக முககவசம்
அணிந்திருக்க வேண்டும்.
தனி மனித இடைவெளியை
கடைபிடிக்க வேண்டும். கிருமி
நாசினி மூலம் அடிக்கடி
கைகளை சுத்தம் செய்யவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 2 டோஸ்
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக
ஆர்.டி.பி.சி.ஆர்.
பரி சோதனை செய்ததற்கான சான்றுடன் வரவேண்டும்.
அதனை
உடல் தகுதி தேர்வுக்கு நுழையும் போது காண்பிக்க
வேண்டும். அங்கு வெப்ப
பரிசோதனை செய்யப்படும்.
கொரோனா
தொற்று யாருக்காவது உறுதி
செய்யப்பட்டால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். தேர்வு நடக்கும் மைதானத்தில் குடிநீர், கழிப்பறை, முதலுதவி,
ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதில்
ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்
பணி நாட்களில் 0413-2277900 என்ற
எண்ணில் தொடர்பு கொண்டு
தெரிந்து கொள்ளலாம்.