சிறுபான்மையின மாணவர்கள்
கல்வி உதவித் தொகை
விண்ணப்ப தேதி நீட்டிப்பு – விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள்
கல்வி உதவித் தொகை
பெற விண்ணபிக்க வரும்
15ம் தேதி வரை
கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசு,
அரசு உதவி பெறும்
மற்றும் அங்கீகரிக்கபட்ட தனியார்
கல்வி நிலையங்களில் 1ம்
வகுப்பு முதல் பி.எச்.டி.,
வரை பயிலும் இஸ்லாமியர் உட்பட பிற மாதங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் கல்வி
உதவித் தொகை பெற
www.scholarships.gov.in இணையதள
முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் நலனையொட்டி, உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி
வரை கால அவகாசம்
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து
கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை
கோரி, மாணவர்களிடம் இருந்து
வந்த விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தேசிய
கல்வி உதவிதொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும்.தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், அல்லது
தவறும் பட்சத்தில் கல்வி
நிலையங்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்.