நாடு முழுவதும்
இலவச ரேஷன் பொருட்கள்
விநியோகம் – மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
இந்திய
மக்கள் அனைவருக்கும் பயன்படும்
வகையில் நாடு முழுவதும்
பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த
வகையில் ஏழை, எளிய
மக்கள் தங்கள் அன்றாட
தேவைகளை பூர்த்தி செய்யும்
வகையில் மத்திய அரசின்
ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடு
முழுவதும் கொரோனா இரண்டாம்
அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அதனால் ஒவ்வொரு
மாநிலங்களிலும் நோய்
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில்
சில மாநிலங்களில் பொது
முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதம மந்திரி கரீப்
கல்யாண் அன்ன யோஜனா
திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், சுமார் 79.88 கோடி
பேருக்கு தலா ஐந்து
கிலோ உணவு பொருட்களை
வழங்குவதற்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தேசிய உணவு
பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
மக்களுக்கு தேவையான உணவு
பொருட்கள் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் மத்திய உணவு
மற்றும் பொது விநியோகத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களுக்கு தேவையான
கோதுமை மற்றும் அரிசி
ஒதுக்கீட்டு அளவு குறித்து
தீர்மானிக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழல் இன்னும் மோசமாகும்
பட்சத்தில் இந்த இலவச
பொருட்கள் இரண்டு மாதங்கள்
தவிர்த்து, மேலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள்
வெளியாகியுள்ளது. இந்த
இலவச திட்டத்துக்கு ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம்
டன் ஆகும். இதற்கான
மானியச்செலவு ரூ.25,332.92
கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நாடு
முழுவதும் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட வேண்டிய
சூழல் நிலவி வருவதால்,
இரண்டு மாதங்களுக்கு இலவச
ரேஷன் பொருட்கள் வழங்கப்பட
உள்ளது என்ற கருத்துக்கள் மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.