தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு
நாடு
முழுவதும் கொரோனா கடந்த
1 வருடங்களாக பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பலர் வீட்டிலிருந்தும், சிலர் அலுவலகங்களுக்கும் சென்று பணியாற்றுகின்றனர். கொரோனா பரவல்
காரணமாக அச்சத்துடன் பணிக்கு
செல்கின்றனர். வீட்டிலிருந்து பணிபுரிவர்களும் பல
பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால்
ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதை
சரி செய்யவும், அவர்களை
உற்சாகப்படுத்தவும், ஊக்கமளிக்கவும் பல நிறுவனங்கள் ஊதியத்துடன் ஒரு வாரம் விடுமுறை
அளித்துள்ளது .
அவர்கள்
தங்கள் குடும்பத்தினருடன் நேரம்
செலவிடவும், தடுப்பூசி போட்டு
கொள்ளவும், உடல்நிலையை கவனித்து
கொள்ளவும் இந்த விடுப்பு
வழங்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த, கோத்ரெஜ் புராப்பர்ட்டீஸ் நிறுவனம், ஐந்து நாட்களுக்கு அலுவலகத்திற்கும், ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த,
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்
சுய அக்கறை தினம்
என்ற திட்டத்தின் கீழ்
இந்தியாவில் உள்ள அதன்
ஊழியர்களுக்கு இன்று
விடுப்பு வழங்கியுள்ளது. மேலும்
அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும்
திட்டத்தின் கீழ் ஜூன்
இறுதிக்குள், விடுப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளது.
டெல்லியை சேர்ந்த ரெப்
இந்தியா நிறுவனம், மே,
6 முதல் 9 ம் தேதி
வரை ஊழியர்களுக்கு விடுமுறை
அறிவித்துள்ளது.
இதனை
தொடர்ந்து வாரத்தில், மூன்று
நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு
நாட்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திலும் பணியாற்றும் திட்டத்தை
கூகுள் நிறுவனத்தின் தலைமை
செயல் அதிகாரி சுந்தர்
பிச்சை அறிவித்துள்ளார். தொண்டு
நிறுவனமான தஸ்ரா அதிகபட்சமாக ஏப்.26 முதல் வரும்
9ம் தேதி வரை
14 நாட்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள்
விடுப்பை பயன்படுத்தி கொண்டு
நலம் பெற வேண்டும்
எனவும் இந்த விடுப்பு
ஊழியர்களை ஊக்குவிக்கும் எனவும்
இதன் மூலம் ஊழியர்கள்
புத்துணர்வு பெறுவார்கள் எனவும்
நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.