கொரோனா தடுப்பு
பணி – 2,100 சுகாதார
பணியாளர்கள் நியமனம்
கரோனா
தடுப்பு பணிக்காக புதிதாக
2,100 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கரோனா
பரவல் தொடர்பாக முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் மே 7ஆம்
தேதி நடைபெற்ற மாவட்ட
ஆட்சியர்களின் கூட்டத்தில் 2,000 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய
முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிக்காக
புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர் அவர்கள்
6 மாதத்திற்கு பணியில் இருப்பார்கள்.
தற்காலிக
பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொகுப்பூதியமாக தலா
ரூ. 60,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.