பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு: விண்ணப்பிக்காதவர்கள் கவனத்துக்கு
அண்ணா
பல்கலைக்கழகத்தின் நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை,
கொரோனா பரவல் காரணமாக
பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளி
வைத்தது. இதைத் தொடர்ந்து,
செமஸ்டர் தேர்வுகள் கடந்த
பிப்ரவரி மாதம் இணைய
வழியில் நடத்தப்பட்டன. அதில்,
4 லட்சத்துக்கும் அதிகமான
மாணவ, மாணவிகள் கலந்து
கொண்டனர்.
தொடர்ந்து,
தேர்வு முடிவுகளை கடந்த
மாதம் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், ஒரு
லட்சத்துக்கும் அதிகமான
மாணவர்களுக்கு, தேர்வு
எழுதிய பாடத்துக்கு அருகே
தேர்ச்சி அல்லது தோல்வி
என்று குறிப்பிடாமல், நிறுத்திவைப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார்
30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சிலரால்
தேர்வுக்கே விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இது
தொடர்பான புகார் தமிழக
அரசின் பார்வைக்கு கொண்டு
செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த
செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக பிப்ரவரி
மாதம் நடந்த தேர்வுக்கு பதில்
மறு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை
அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
மேலும்,
பிப்ரவரி தேர்வில் வெற்றி
பெற்ற மாணவர்கள் கூடுதல்
மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம்.
மறு தேர்வை தோல்வி
அடைந்தவர்களுடன், வெற்றி
பெற்றவர்களும் எழுதலாம்.
இதற்கு கட்டணம் செலுத்த
தேவையில்லை. பழைய வினாத்தாள்கள் முறைப்படி, தேர்வனாது 3 மணி
நேரம் ஆன்லைன் வழியாக
தேர்வு நடத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத விருப்பம்
உள்ள மாணவர்கள் 24ஆம்
தேதி (இன்று) முதல்
விண்ணப்பிக்கலாம் என்று
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அத்துடன், கடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள்
மட்டும் மறுதேர்வு எழுத
விண்ணப்பிக்க வேண்டும்
என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும்
அண்ணா பல்கலைகழகம் கேட்டுக்கொண்டது.
இந்த
நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வுக்கான தேர்வு
அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
2013 ரெகுலேஷனுக்கான முதுகலை
பட்டப்படிப்பு, 2017 ரெகுலேஷனுக்கான இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள்
ஜூன் 14ஆம் தேதி
தொடங்கவுள்ளது. மற்ற
ரெகுலேஷன்களுக்கான இளங்கலை,
முதுகலை, 2013 ரெகுலேஷனுக்கான இளங்கலை
படிப்புகளுக்கான தேர்வுகள்
ஜூன் 21ஆம் தேதி
தொடங்கவுள்ளது.
பணம்
கட்டாமல் இருக்கும் மாணவர்கள்
வருகிற 3ஆம் தேதிக்குள் பணம் கட்டலாம். ஏற்கனவே
தேர்வெழுதிய மாணவர்கள் பணம்
கட்டத் தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதிதான் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன என்று
உயர்கல்வித் துறை அமைச்சர்
பொன்முடி தெரிவித்துள்ளார்.