மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சி மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தில் (ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியில்) தொடங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் குருப் 4 தேர்விற்கான அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் வகுப்பெடுப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.
இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி போட்டித் தேர்வா்களும் சோந்து பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901, 94990 55902 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow