குரூப்-2 தேர்வர்களுக்கு இலவச நேர்முகத் தேர்வு பயிற்சி முகாம்
சென்னை அண்ணாநகரில் உள்ள ஆா்வம் ஐ.ஏ.எஸ் அகாதெமியில், குரூப்-2 தேர்வா்கள் பயன்பெறும் வகையில் நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜன.11) முதல் நடைபெறவுள்ளது.
அந்தப் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தேர்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குருப்-2 மற்றும் குரூப்-2ஏ காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதிக் கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான அடிப்படைப் பயிற்சி மற்றும் மாதிரி நேர்காணல் தேர்வு உள்ளிட்ட பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் தேர்வா்களுக்கு, ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர்வா்களுக்கு வழிகாட்டுகிறாா்கள்.
தகுதியுள்ள தேர்வா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு 7448814441 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow