தாட்கோ மூலம் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
தாட்கோ மூலம் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் 10ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள், கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி என்டிடிஎப் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும். மேலும், தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை பெறலாம். மேலும், தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow