HomeBlogஓய்வூதிய உதவி பெறுவோர் ரேஷன் கார்டு பெற முகாம்

ஓய்வூதிய உதவி பெறுவோர் ரேஷன் கார்டு பெற முகாம்

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

Camp to get ration card for pensioners

ஓய்வூதிய உதவி
பெறுவோர் ரேஷன் கார்டு
பெற முகாம்

முதியோர்
ஓய்வூதியதாரர்கள், ‘ஸ்மார்ட்‘
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நேற்று
முன்தினம் நடந்தது.முதியோர்
ஓய்வூதியம் பெறுவோர், ரேஷன்
கார்டு வழங்க வேண்டுமென,
தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி,
விரைவில், ‘ஸ்மார்ட்‘ ரேஷன்
கார்டு வடிவில், ஓ.ஏ.பி.,
ரேஷன்கார்டு வழங்கப்பட உள்ளது.
ஓய்வூதியம் பெறும் முதியோரிடம், அதற்கான விண்ணப்பத்தை பெறும்
முகாம் நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு தாலுகா
அலுவலகத்தில், அதற்கான
முகாம் நடந்தது. முதியோர்
ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு ரேஷன் கார்டு வழங்க
வேண்டுமென, ஆதார் அட்டை,
ஓய்வூதியம் பெறும் உத்தரவு
நகல்களுடன் விண்ணப்பித்தனர்.திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர்
தினேஷ் ராகவன், முதியோரிடம் இருந்து, நேற்று முன்தினம்
விண்ணப்பங்களை பெற்றார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஓய்வூதிய உதவி
பெறுவோர், ரேஷன் கார்டு
இல்லையெனில், தனி ரேஷன்
கார்டு கோரி, அந்தந்த
தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.முதியோர் ஓய்வூதிய
உத்தரவு, ஆதார் அட்டை
நகல்களுடன் விண்ணப்ப படிவத்தை
பூர்த்தி செய்து வழங்கலாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular