பயிர்களுக்கு காப்பீடு
செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி அறிக்கை:
தோட்டக்கலை பயிர்களில், காலநிலை மாற்றத்தால் விளைச்சல் இழப்புகள் ஏற்பட
வாய்ப்புள்ளது.
இழப்பீடு
பெற, புதுப்பிக்கப்பட்ட பிரதமரின்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள
வேண்டும். தற்போது, ராபி
பருவத்துக்கு காப்பீட்டு கட்டணத்தை அருகில் உள்ள
தொடக்க வேளாண் கூட்டுறவு
வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை
மையங்கள் வாயிலாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.வாழைக்கு
ஒரு ஏக்கருக்கு, 4,642 ரூபாய்
பிரீமிய தொகை, வரும்,
பிப்., 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
காப்பீட்டு தொகையாக, ஹெக்டேருக்கு, 2,18,348 ரூபாய்
வழங்கப்படும். தக்காளிக்கு ஒரு ஏக்கருக்கு, 1,417 ரூபாய்
வரும், பிப்., 15ம்
தேதிக்குள் பிரீமிய தொகையாக
செலுத்த வேண்டும். மரவள்ளி
பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 1,630 ரூபாய் வரும்,
பிப்., 28 ம் தேதிக்குள் பிரீமியமாக செலுத்த வேண்டும்.
காப்பீட்டு தொகையாக, ஒரு
ஹெக்டேருக்கு, 80,522 ரூபாய்
கிடைக்கும்.