தேசிய வாக்காளர்
தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டி
தேசிய
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான விழிப்புணர்வு போட்டியை தேர்தல் கமிஷன்
நடத்துகிறது.வாக்காளர் பட்டியல்
சுருக்கமுறை திருத்த பணிகள்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
அதன்
ஒரு பகுதியாக, விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒன்பது
முதல் பிளஸ் 2 வரை
மாணவ, மாணவியர், கல்லுாரி
மாணவ, மாணவியர்; 18 வயதுக்கு
மேற்பட்டவர்கள் பங்கேற்க
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பள்ளி,
கல்லுாரி மாணவ, மாணவியர்,
ஓவியம் வரைதல், சுவரொட்டி
வடிவமைப்பு, ஒரு வரி
விழிப்புணர்வு வாசகம்
எழுதுதல், பாட்டு, குழு
நடனம் மற்றும் கட்டுரை
போட்டியில் பங்கேற்கலாம்.பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான
போட்டியில் பங்கேற்க தவறிய
மாணவ, மாணவியர், இணையதளத்தில் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் https://www.elections.tn.gov.in/ என்ற
இணையதளத்தில், ‘SVEEP contest
2022 என்ற முகவரி வழியாக
வரையறுக்கப்பட்ட போட்டியில் பங்கேற்கலாம். ஆன்லைன்
போட்டிகள், ‘தேர்தல்கள், 100 சதவீதம்
வாக்காளர் பட்டியலில் பெயர்
பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த இந்திய தேர்தல்
ஆணையத்தின் முயற்சிகள்‘ என்ற
கருத்தில் நடக்கும்.
போட்டிகளில், வரும் 31ம் தேதி
மாலை, 5:00 மணி வரை
பங்கேற்கலாம். வெற்றி
பெறுபவர்களுக்கு, மாநில
அளவில தேசிய வாக்காளர்
தின விழாவில், பரிசு
வழங்கப்படும்.
மாநில
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசாக, 5,000 ரூபாய்; இரண்டாவது
பரிசாக, 3,000 ரூபாய்; மூன்றாவது
பரிசாக, 2,000 ரூபாய் வழங்கப்படும்.