Join Whatsapp Group

Join Telegram Group

தயார் நிலையில் இலவச மரக்கன்றுகள் – விவசாயிகளுக்கு அழைப்பு

By admin

Updated on:

தயார் நிலையில்
இலவச மரக்கன்றுகள்விவசாயிகளுக்கு அழைப்பு

புதிய
வேளாண் காடுகள் வளர்ப்பு
திட்டத்தின் கீழ், இலவச
மரக்கன்றுகள் பெற,
விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

சூலுார் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜய கல்பனா கூறியதாவது:

சூலுார்
வட்டாரத்தில் உள்ள,
21
வருவாய் கிராமங்களில் உள்ள
விவசாய நிலங்களில், நீடித்த
பசுமை போர்வைக்கான இயக்கம்
என்ற புதிய வேளாண்
காடுகள் வளர்ப்பு திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது. வேம்பு,
ஈட்டி, மகா கனி,
நாவல், பெரு நெல்லி
உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் மூலம் வரப்பு நடவு
முறைக்கு, ஏக்கருக்கு, 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு
செய்ய, ஏக்கருக்கு, 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றை,
இரண்டாமாண்டு முதல்
நான்காமாண்டு வரை
பராமரிக்க, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.உயிருடன்
நல்ல முறையில் இருக்கும்
மரக்கன்று ஒன்றுக்கு, ஆண்டுக்கு,
7
ரூபாய் வீதமும் மூன்று
ஆண்டுகளுக்கு, 21 ரூபாயும்
வழங்கப்படும்.

இருட்டு
பள்ளம், பிள்ளையார் புரம்,
வட கோவை மற்றும்
ஓடந்துறையில் உள்ள
வனத்துறை நாற்றங்கால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில்
உள்ளது.

ஆர்வமுள்ள
விவசாயிகள், சூலுார் வேளாண்
விரிவாக்க மையத்தில் ஆன்லைனில்
பதிவு செய்து, அதற்குரிய
சான்றுடன் சென்று, மேற்கண்ட
இடங்களில் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]