TNPSC குரூப் 2 மற்றும்
2A தேர்வு
பாடத்திட்டத்தில் மீண்டும்
திருக்குறள்
TNPSC குரூப் 2 மற்றும்
2A தேர்வுகளுக்கான புதிய
பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டிருந்தது.
இதற்கு
பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,
பாடத்திட்டத்தில் மீண்டும்
திருக்குறள் சேர்க்கப்பட்டு அறிவிப்பு
வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில், குரூப் 1, குரூப்
2, குரூப் 2 ஏ, குரூப்
4 போன்ற தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. 2022 ஆம்
ஆண்டு தேர்வுகளுக்கான புதிய
பாடத்திட்டம் மற்றும்
மாதிரி வினாத்தாள் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதில்
குரூப் 2, குரூப் 2ஏ
போட்டித் தேர்வில் திருக்குறள் பாடம் நீக்கப்பட்டு இருந்தது.
புதிய
பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டுள்ள சம்பவம்
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம்
தெரிவித்திருந்தனர். எனவே,
பாடத்திட்டத்தில் மீண்டும்
மாற்றங்கள் செய்து திருத்தப்பட்ட பாடத்திட்டம் நேற்று
உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி
தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்
மொழித் தகுதித்தேர்வில் ( தொகுதி
11 மற்றும் 11 ஏ உட்பட)
திருக்குறள் தொடர்பான கட்டுரை
வரைதல் எனும் பகுதி
சேர்க்கப்பட்டு, திருத்தப்பட பாடத்திட்டம் தேர்வாணைய
இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.