பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி
பருத்தி
சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண்
துறை சார்பில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் நடக்கிறது.ரெட்டியார்சத்திரம் ஒன்றிய
பகுதியில் ஏராளமான ஏக்கர்
பரப்பளவில் பருத்தி சாகுபடி
நடக்கிறது.
இவ்விவசாயிகளுக்கு வேளாண்துறையின் அட்மா
திட்டம் மூலம் பருத்தி
சாகுபடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பருத்தி சாகுபடியில் எதிர்கொள்ளும் பிரச்னை,
பாதுகாப்பு வழிமுறைகள், மகசூல்
அதிகரிப்பு நுட்பங்கள் குறித்து,
பருத்தி ஆராய்ச்சி மையத்தில்
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான
தேதி விரைவில் அறிவிக்கப்படும்.ஆர்வமுள்ள விவசாயிகள் அட்மா
திட்ட அலுவலர்களிடம் பட்டா
அல்லது சிட்டா, ஆதார்,
வங்கிக் கணக்கின் முதல்
பக்க நகலுடன் பதிவு
செய்ய வேண்டும். இதற்கு
94430 13731, 87547 34701ல் தொடர்பு கொள்ளலாம்.