பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு 28ல் தொடக்கம்
சித்தா,
ஆயுா்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
வரும் 28-ஆம் தேதி
தொடங்குகிறது.
நீட்
தோவில் தோச்சி பெற்ற
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இந்திய
மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு
இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி,
யுனானி மருத்துவக் கல்லூரி,
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டையில் சித்த
மருத்துவக் கல்லூரி, மதுரை
மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி
மருத்துவக் கல்லூரி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டம்
நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி
ஆகியவை உள்ளன.
இந்த
5 அரசுக் கல்லூரிகளில் உள்ள
330 இடங்களில், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள்
ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள
280 இடங்கள் மாநில அரசுக்கு
உள்ளது. இதேபோல் 24 தனியாா்
கல்லூரிகளில் உள்ள
இடங்களில் 15 சதவீதம் அகில
இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில்
65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்நிலையில், சித்தா, ஆயுா்வேதம், யுனானி,
ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ்,
பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம்
இணையதளத்தில் வரும்
28-ஆம் தேதி காலை
10 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி
18-ஆம் தேதி மாலை
5 மணி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறவுள்ளது.
நீட்
தோவில் தோச்சி பெற்ற
மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளை இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த
ஆவணங்களுடன் ஜனவரி 18-ஆம்
தேதி மாலை 5.30 மணிக்குள்
செயலாளா், தோவுக்குழு, இந்திய
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
துறை இயக்குநா் அலுவலகம்,
அறிஞா் அண்ணா அரசினா்
இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை
– 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
முதுநிலை
ஹோமியோபதி படிப்புக்கான விண்ணப்ப
விநியோகமும் வரும் 28-ஆம்
தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. அதுகுறித்த விவரங்கள் சுகாதாரத்
துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.