கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு
கொரானோ
பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களை தற்போது நிரப்ப கால்நடை
பராமரிப்பு கமிஷனர் ஞானசேகரன்
உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் 1573 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மதுரை
மாவட்டத்தில் மட்டும்
64 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்காக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 8000 விண்ணப்பங்கள் தகுதி
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதிலிருந்து 64 பேர்
தேர்வு செய்யப்படுவர்.
கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் நடராஜ் குமார் கூறுகையில்:
காலிப்
பணியிடங்களை நிரப்பி கொள்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. கலெக்டரிடம் தேதி மற்றும் இடத்திற்கான அனுமதி பெற்ற பின்
விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவர்.