ஏப்ரல் 11 பி.எஸ்.சி.
நர்சிங் மாணவர் சேர்க்கை
நுழைவுத் தேர்வு
இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமானது இந்திய
தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய
பல்கலைக்கழகமாகும். இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம்
என்ற சட்டத்தை இயற்றிய
பின்னர் 2000 கோடி இந்திய
ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி தேசிய
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை
நர்சிங் படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை நடக்க உள்ளதாக
அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதற்கான
நுழைவுத் தேர்வு மார்ச்
11-ம் தேதி நாடு
முழுவதும் நடைபெற உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
படிப்புக்கு 10ம் வகுப்பு,
12ம் வகுப்பு மேலும்,
டிப்ளமோ இன் ஜெனரல்
நர்சிங் மற்றும் மிட்வைஃபிரி (ஜி.என்.எம்)
படிப்பில் குறைந்தபட்ச 2 வருட
முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத்
தேர்வு இரண்டரை மணி
நேரம் நடக்க உள்ளது.
இதில், 120 பல தேர்வு
கேள்விகள் இருக்கும். இளநிலை
நர்சிங் படிப்புக்கு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு
நியமிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் மார்ச் 20ம்
வரை இந்திரா காந்தி
தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.