பிஎப் திட்ட
புதிய உறுப்பினர்களுக்கு 8.5% வட்டி
இல்லை – EPFO
தேசிய
ஓய்வூதிய திட்டத்தை போல
சுய தொழில் புரியும்
தொழிலாளர்கள் தொழிலாளர்
நல நிதியத்தில் (EPF) உறுப்பினராக சேரலாம். இவர்களுக்கு சேமிப்பை
தொடர்வதற்கு வசதியாக தனி
பிரத்யேக கணக்கு தொடங்கப்படும். அவர்களுக்கு சேரும் தொகை
மூலமாக பணப்பலன் வழங்கப்படும்.
2021-ஆம்
ஆண்டு முதல் இபிஎப்
வட்டி விகிதம் 8.5% வழங்கப்படுகிறது. அதில் தாமாக முன்வந்து
உறுப்பினராக சேருபவர்களுக்கு அதே
வட்டி விகிதம் தரப்பட
மாட்டாது. அவர்களுக்கு 7 சதவிகித
வட்டி விகிதம் மட்டுமே
வழங்கப்படும். மேலும்
அவர்களது கணக்குகள் தனியாக
பராமரிக்கப்படும். புதிய
நிதி தொடர்பான இந்த
அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
முறைசாரா தொழிலில் ஈடுபடும்
ஊழியர்கள் பயன்பெறும் வகையில்
தனி நிதியத்தை உருவாக்கி
செயல்படுத்த முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான
விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்
உள்ள 50 கோடி தொழிலாளர்களில் 10 சதவிகித பணியாளர்கள் மட்டுமே
முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு சமூக
பாதுகாப்பு எதுவும் கிடைப்பதில்லை. எனவே அதனை கருத்தில்
கொண்டு தனி நிதியம்
அமைத்து அதன் மூலமாக
அனைவரும் சேமிக்க வழிவகை
செய்யப்பட்டு வருகிறது.