மின்மோட்டார் பொருத்திய
தையல் மெஷின் பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரம் உயரவும்,
பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும், மின்மோட்டார் பொருத்திய
தையல் மெஷின் வழங்கும்
திட்டத்தை, தமிழக அரசு
அறிவித்துள்ளது.
மாவட்டத்தில் வசிக்கும், கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர்
உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள்
விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு
வருமானம், ஒரு லட்சம்
ரூபாய்க்கு மிகாத வருமான
சான்று பெற்று, 20 முதல்
45 வயதுக்கு உட்பட்ட, தையல்
பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவை, கணவனால்
கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், கலெக்டர் அலுவலகத்தின் முதல்தளத்தில் இயங்கும்,
சிறுபான்மையினர் மற்றும்
பிற்படுத்தப்பட்டோர் நல
அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: 0421 2999130, dbcwotpr@gmail.com