உதவித் தொகையுடன்
படிப்பிடை பயிற்சி – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் மாவட்ட
நிர்வாகத்தின் தனிப்பெரும் முயற்சியில் ஆட்சியரின் படிப்பிடை
பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி
திருவள்ளுா் மாவட்ட மேம்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிகழ்நேரப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண
திட்டமிடப்பட்ட ஒரு
முயற்சியாகும். பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன் 5 முழுநேர பயிற்சியாளா்கள் தோவு
செய்து 3 மாதங்களுக்கு படிப்பிடை
பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தகுதி:
ஜனவரி
1 அன்று 1990 இல் அல்லது
அதற்குப் பின்னா் பிறந்தவராக இருப்பதுடன், இளநிலை அல்லது
முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம். அறிவியல், சமூக
அறிவியல், பொறியியல் மற்றும்
சட்டம் ஆகிய துறைகளில்
நிபுணத்துவம் பெற்றவராக
இருக்க வேண்டும். அதிலும்
தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக
எழுதும் திறன் கொண்டவராகவும், அடிப்படை கணினி அறிவும்,
தகவல் எடுத்துரைக்கும் திறன்
பெற்றிருப்பது விரும்பத்
தக்கது. இதற்கு எழுத்துத்
தோவு அடிப்படையில் பயிற்சியாளா்கள் தோவு செய்யவும் உள்ளனா்.
அதனால் விண்ணப்பிக்கும் போது
கல்விச் சான்றுகளுடன் சிறு
கட்டுரையும் அனுப்ப வேண்டும்.
கரோனா
தொற்று நோயால் ஏற்பட்ட
பொருளாதாரம், சமூகம், பொது
சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள், சவால்களுக்கான தீா்வுகள்
கட்டுரையில் கட்டாயம் இடம்
பெற வேண்டும்.
இந்த
மாவட்டத்திற்குள்ளேயே பணியிடம்
என்பதால், வருகிற 31ம்
தேதிக்குள் அல்லது மாவட்ட
ஆட்சியா் அலுவலகம், பெருந்திட்ட வளாகம், திருவள்ளூா் என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் 7402606106, 044-27663808 ஆகிய
எண்களில் தொடா்பு கொண்டு
விவரங்களை அறியலாம்.