TAMIL MIXER EDUCATION.ன் AITT செய்திகள்
அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சி
பெற
நடைபெறும்
அகில
இந்திய
துணை
தொழிற்தேர்வுக்கு
நவம்பர்
10ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
என்று
வேலைவாய்ப்பு,
பயிற்சித்துறை
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளதாவது:
கைவினைஞர்
பயிற்சி
திட்டத்தின்
கீழ்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சி
பெற்ற
பயிற்சியாளர்களுக்கு
அகில
இந்திய
தொழிற்தேர்வு,
ஒவ்வொரு
ஆண்டும்
டிஜிடி
டெல்லியால்
நடத்தப்பட்டு
வருகிறது.
கொரோனா பெருந்தொற்று
காரணமாக
கடந்த
இரண்டு
ஆண்டுகளாக
அகில
இந்திய
தொழிற்தேர்வில்
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு
துணைத்
தேர்வுகள்
நடைபெறவில்லை.
தற்பொழுது,
கருத்தியல்
(Trade Theory) பணிமனை
கணித
அறிவியல்
(Workshop calculation & Science) மற்றும்
வேலைவாய்ப்புத்
திறன்
(Employability Skill) ஆகிய
பாடங்களில்
தேர்ச்சி
பெறாத
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
25.11.2022 முதல்
CBT எனப்படும்
கணினி
முறையில்
தேர்வு
நடத்த
Ministry of Skill Development And Entrepreneurship- Directorate General of
Training (டிஜிடி
டெல்லி)
சார்பில்
திட்டமிடப்பட்டுள்ளது.
2014
முதல்
2017 வரை
பருவ
முறையில்
பயிற்சி
பெற்ற
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
துணைத்
தேர்வு
எழுத
(1+ 4) 5 வாய்ப்புகள்
கொடுக்கப்பட்ட
நிலையில்
தற்போது
கூடுதலாக
ஒரு
அரிய
வாய்ப்பும்,
2018 முதல்
2021 வரை
ஆண்டு
முறையில்
பயிற்சி
பெற்ற
முன்னாள்
பயிற்சியாளர்களுக்கு
துணைத்
தேர்வு
எழுத
கூடுதலாக
ஒரு
வாய்ப்பும்
டிஜிடி
டெல்லியால்
வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கருத்தியல்
(Trade Theory), பணிமனை
கணித
அறிவியல்
(Workshop calculation & Science) மற்றும்
வேலைவாய்ப்புத்
திறன்
(Employability Skill)
ஆகிய
பாடங்களில்
தேர்ச்சி
பெறாத
முன்னாள்
பயிற்சியாளர்கள்
தாங்கள்
பயின்ற
தொழிற்பயிற்சி
நிலையங்களை
10.11.2022 தேதிக்குள்
தொடர்பு
கொண்டு,
சம்பந்தப்பட்ட
பாடங்களுக்கான
தேர்வுக்
கட்டணத்தை
தொழிற்பயிற்சி
நிலைய
வழிகாட்டுதலின்படி
Portal payment Linkல்
செலுத்த
வேண்டும்.
தேவைப்பட்டோர்,
இந்த
நல்வாய்ப்பினை
பயன்படுத்தி
துணைத்
தேர்வை
CBT முறையில்
எழுதி
பயன்பெறுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
மேலும்,
அகில
இந்திய
துணைத்
தொழிற்தேர்வு
நவம்பர்
2022, குறித்த
தகவல்களை
உடனுக்குடன்
பெற http://skilltraining.tn.gov.in
மற்றும்
https://ncvtmis.gov.in/pages/home.aspx
ஆகிய
இணையதளங்களில்
பார்த்துத்
தெரிந்துகொள்ளுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறது.