PF வாடிக்கையாளர்களுக்கு ஒரு
அரிய திட்டம்
நாடு
முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்
தங்களது ஊதியத்தின் ஒரு
பகுதியை வருங்கால வைப்பு
நிதியில் (PF) முதலீடு செய்ய
வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு
முதலீடு செய்பவர்கள் அதிக
வட்டி பெற விரும்பினால் தன்னார்வ வருங்கால வைப்பு
நிதியை (VPF – Voluntary Provident Fund) தேர்வு
செய்யலாம்.
இந்த
திட்டத்தில் PF அக்கவுண்டில் இருந்து
12 விழுக்காடுக்கு மேல்
உள்ள தொகையை முதலீடு
செய்யலாம். நீங்கள் தற்போது
வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினால் சுலபமாக VPF அப்டேட்
ஆகிவிடும். தற்போது உள்ள
வங்கிகளில் உள்ள முதலீடு
திட்டங்களில் தற்போது
குறைந்த வட்டி மட்டுமே
வழங்கப்படுகிறது. இதனால்
ஊழியர்களுக்கு எந்த
லாபமும் இல்லை.
இதனால்
ஒப்பீட்டளவில் அதிக
வட்டி வழங்கும் EPF, VPF போன்ற
திட்டங்களில் முதலீடு
செய்வதே சிறந்தது. 2020-2021 ஆம்
நிதியாண்டில் PF 8.5% வட்டி
கொடுத்துள்ளது. எனவே
மற்ற முதலீடு திட்டங்களை காட்டிலும் இந்த திட்டம்
அதிக வருமானத்தை பெற்று
கொடுக்கும். PF போலவே VPF திட்டங்களுக்கும் வரி சலுகைகள்
உண்டு. மேலும் முதலீடு
செய்யும் போதும், பணம்
சேரும் போதும், பணம்
எடுக்கும் போதும் எந்த
வரியும் விதிக்கப்படாது.