தமிழக மின்
வாரியத்தின் 2900 கள உதவியாளர்
பணிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக
மின் வாரியத்தில் மொத்தம்
2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த
ஆண்டு மார்ச் மாதத்தில்
அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஆனால்
அந்நேரத்தில் இந்தியா
முழுவதும் CORONA தொற்று
பரவி வந்ததால் அப்பணிகள்
கிடப்பில் போடப்பட்டன.
மீண்டும்
அதற்கான ஆன்லைன் பதிவுகள்
இந்த ஆண்டு மார்ச்
மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.
ஆன்லைன் பதிவுகள் அனைத்தும்
முடிவடைந்த நிலையில், பதிவு
செய்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த கட்ட தேர்வு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பணியிட
அறிவிப்பின் படி முதற்கட்டமாக இப்பணிக்கு உடற்தகுதி தேர்வு
நடைபெறும். அதில் தேர்ச்சி
பெறுவோருக்கு மட்டுமே
அடுத்த கட்டமாக எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவ்வாறு உடற்தகுதி தேர்வு
ஆனது இந்த ஏப்ரல்
மாதத்தில் நடைபெறும் என
தமிழக மின்சாரா வாரியம்
அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் CORONA வைரஸின்
2ம் அலை பரவி
வருவதால் இந்த உடற்தகுதி
தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழக
மின் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதற்கான
தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.