ஊக்கத்தொகையுடன் நாலாயிர திவ்ய பிரபந்தம்
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, வைணவ
பிரபந்த பாடசாலையில், நாலாயிர
திவ்ய பிரபந்தம் கற்று
அறியும் பயிற்சிக்கு, விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹிந்து
சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு மாவட்டம்,
நெம்மேலி ஆளவந்தார் நாயகர்
அறக்கட்டளையின் வைணவ
பிரபந்த பாடசாலை இயங்கி
வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அங்கு
தங்கி பயில விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி
பெறும் மாணவர்களுக்கு உணவு,
சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சி
வழங்கப்படும். ஊக்கத்
தொகையாக
ஒவ்வொரு மாதமும், 3000 ரூபாய்
வழங்கப்படும்.
வைணவ
பிரபந்த பயிற்சி பள்ளியில்
சேர, எட்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற, 14 முதல்
25 வயதுக்குட்பட்ட ஹிந்து
மதத்தை சார்ந்தவராக இருத்தல்
வேண்டும். இரண்டு ஆண்டு
காலம் தங்கி பயிற்சி
பெற வேண்டும். சேர்க்கை
படிவங்களை, அறக்கட்டளை அலுவலகத்தில் பெறலாம். அறநிலைத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php
என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி
25ம் தேதிக்குள்அனுப்பி வைக்க
வேண்டும்