கல்வெட்டியல் டிப்ளமா
படிப்பு துவக்கம்
தமிழக
தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறைகள் சார்பில்
நடத்தப்படும், இரண்டாண்டு கால கல்வெட்டியல் டிப்ளமா
படிப்பை, அமைச்சர் தங்கம்
தென்னரசு துவக்கி வைத்தார்.
சென்னை தமிழ் வளர்ச்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சில், கல்வெட்டியல் படிப்புகளை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
நாட்டில்
அதிகளவில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அவை, பிராமி,
கிரந்தம், வட்டெழுத்து, தற்கால
எழுத்துகளுடன் உள்ளன.
பிராமி எழுத்துக்களை படிப்போர்
குறைந்து வருகின்றனர். இந்த
படிப்பில், இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளதால், அந்த
குறை விரைவில் தீரும்
என நம்புகிறேன்.
தமிழக
தொல்லியல் துறை சார்பில்,
பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடக்கின்றன. மேலும் சில
இடங்களில், மத்திய தொல்லியல்
ஆலோசனை வாரிய அனுமதியுடன், விரைவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கடல்
சார் அகழாய்வுகளை நடத்தி,
பழந்தமிழரின் அழிந்த
சுவடுகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளோம். கல்வெட்டியல் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிப்போம்.