Join Whatsapp Group

Join Telegram Group

ஸ்ரீரங்கம் கோவிலில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

By admin

Updated on:

ஸ்ரீரங்கம் கோவிலில்
பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில்,
வைணவ பயிற்சி சான்றிதழ்
படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன.,
24
வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் எழுத்தர், ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் – Apply Here

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில்,
வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி
வகுப்புகள் துவங்க உள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஹிந்து வைணவ
கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க
வேண்டும். பயிற்சி காலத்தில்
மாதம் 3,000 ரூபாய் உதவித்
தொகை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், விண்ணப்ப
படிவங்களை, www.srirangam.org
என்ற கோவில் இணையதளத்திலும்; www.hrce.tn.gov.in
என்ற அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் காலம்,
ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துஉள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் எழுத்தர், ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் – Apply Here

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]