சோலார், எல்.இ.டி.,
பல்பு தயாரிக்க இலவச
பயிற்சி
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின், ‘உன்னத் பாரத் அபியான்‘
திட்டத்தின் சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கு, சோலார்
விளக்கு மற்றும் எல்.இ.டி.,
பல்புகள் தயாரிக்க இலவச
பயிற்சி அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரியின், உன்னத்பாரத் அபியான் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பூபாலன் கூறியதாவது:
மத்திய
அரசின், உன்னத் பாரத்
அபியான் திட்டத்தின் சார்பில்,
100 இளைஞர்களுக்கு, தமிழ்நாடு
ஸ்கில் டிரெய்னிங் சென்டர்
பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன்மூலம் பயிற்சி அளித்துசான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர்கள்
மூலமாக, பொதுமக்களுக்கு, சோலார்
விளக்கு மற்றும் எல்.இ.டி.,
பல்புகள் தயாரிக்க இலவச
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.எனவே,
வேலையில்லாத பட்டதாரிகள், பெண்கள்
மற்றும் சுயதொழில் செய்ய
விருப்பம் உள்ளவர்கள் இலவச
பயிற்சி பெற 96005 72111 என்ற
மொபைல்போன் எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.