வைணவச் சான்றிதழ்
படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – ஸ்ரீபெரும்புதூா்
ஸ்ரீபெரும்புதூா் அருள்மிகு ஆதிகேசவப்
பெருமாள் மற்றும் பாஷ்யகார
சுவாமி திருக்கோயிலில் வைணவ
சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சா்
பி.கே.சேகா்பாபு,
மானியக் கோரிக்கையின் போது
ஜாதி வேறுபாடின்றி அா்ச்சகா்களை உருவாக்கும் இந்து சமய
அறநிலையத்துறையின் ஆறு
அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகள்
மேம்படுத்தப்படும்.
இதன்
தொடா்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருள்மிகு
ஆதிகேசவ பெருமாள் மற்றும்
பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு
சான்றிதழ் பயிற்சி வகுப்பு
நடத்தப்படவுள்ளது. இதில்
சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள் இந்துக்களாக இருக்க
வேண்டும்.
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி
பெற்றிருக்க வேண்டும். 2022ம்
ஆண்டு, ஜன.1-ஆம்
தேதியன்று, 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உள்பட்டவராகவும், இந்து வைணவ கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவா்களாகவும் இருத்தல்
வேண்டும்.
பயிற்சி
பெறும் மாணவா்கள் பயிற்சி
நிலைய வளாகத்திலேயே தங்கிப்
பயில வேண்டும். பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை,
உறைவிடம், பயிற்சி காலத்தில்
மாதம் ஒன்றுக்கு ரூ.
3,000 உதவித் தொகை ஆகியன
வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள், விண்ணப்பப் படிவங்களை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயல் அலுவலா், அருள்மிகு
ஆதிகேசவ பெருமாள் மற்றும்
பாஷ்யகார சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் மாவட்டம். விண்ணப்பங்கள் வந்து
சேர வேண்டிய கடைசி
நாள் ஜன.20, 2022.