Join Whatsapp Group

Join Telegram Group

மீனவ சமுதாய மாணவர்களுக்குக் கூடுதலாக 15% மிகை இடஒதுக்கீடு

By admin

Updated on:

மீனவ சமுதாய
மாணவர்களுக்குக் கூடுதலாக
15%
மிகை இடஒதுக்கீடு

மீன்வளப்
பல்கலைக்கழகத்தில் இளங்கலை
மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்குக் கூடுதலாக 15% மிகை இடஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களை 120 லிருந்து
160
ஆக உயர்த்தி வழங்கி
தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு
டாக்டர். ஜெ.
ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மூன்று உறுப்பு
கல்லூரிகளாகிய, மீன்வளக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி
நிலையம், தூத்துக்குடி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி
நிலையம், பொன்னேரி
மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி
நிலையம், தலைஞாயிறு
ஆகிய கல்லூரிகளில் உள்ள
120
இடங்களுக்கு இளநிலை மீன்வள
அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையின் போது, மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 5% இடங்கள் சிறப்பு
ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்கனவே
அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 120- ம், 5% சிறப்பு
முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் படி (மிகை
ஒதுக்கீடு) மீனவர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு 6 இடங்களும் சேர்த்து,
2020-21-
ம் கல்வியாண்டு வரை
சேர்க்கப்பட்டனர்.

இதனடிப்படையில் சேர்க்கப்படும் 5% மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் ஆகியவற்றுக்கான உதவித்தொகை
மீனவர் நலவாரியத்தால் முழுமையாக
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய
அரசின் தொலைநோக்கு திட்டத்தில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு
ஒதுக்கீடு செய்யப்படும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை
நிறைவேற்றும் வகையில்
தற்போது, கூடுதலாக 15 விழுக்காடு மிகை இடங்கள் மீனவ
குடும்பத்தைச் சார்ந்த
மாணவர்களுக்கு தமிழ்நாடு
டாக்டர் ஜெ. ஜெயலலிதா
மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை
மீன்வள அறிவியல் பாடப்பிரிவின் சேர்க்கையில் ஒதுக்கீடு
செய்யப்பட்டு அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மீன்வள இளநிலை அறிவியல்
பட்டப்படிப்பிற்கு சேர
விரும்பும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களின் தகுதியின்
(Mark)
அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். மேலும் இம்மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக்
கட்டணம் போன்ற அனைத்துக்
கட்டணங்களையும் மாணவர்களே
செலுத்த வேண்டும்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]