முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் தேர்வு தேதி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தேதி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்கநர்
நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 (2020-21) காலி
பணியிடங்களுக்கு செப்டம்பர் 9, 17, அக்டோபர் 21 தேதிகளில்
அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
செப்டம்பர் 18ஆம் தேதி இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றும் நவம்பர்
14 ஆம் தேதி வரை
அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜன 29-ஆம் தேதி
முதல் பிப்ரவரி 6-ஆம்
தேதி வரை உள்ள
நாட்களில் இரு வேளைகளில்
தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த
தேதிகளில் தொற்று சூழல்,
தேர்வு மையங்களின் தயார்
நிலை மற்றும் நிர்வாக
வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என அறிவிக்கப்படுகிறது. மேலும் விரிவான
அட்டவணை தேர்வு தேதிக்கு
15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும்