Friday, April 25, 2025
HomeBlogஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

You can apply for the Ananda Chaitanya Foundation Scholarship

ஆனந்த சைதன்யா
அறக்கட்டளையின் கல்வி
உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை
குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின்கற்கை நன்றேஎன்ற
கல்வி உதவித் திட்டம்
மூலம் ஏழை மாணவர்கள்
உயர்கல்வி படிப்பதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி,
2021-2022
ம் கல்வியாண்டில் இந்தத்
திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர மற்றும் விடுதிக்கான உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது. அந்த மாணவர்களின் இரண்டாம் செமஸ்டருக்கான நிதி
வழங்கும் விழா குரும்பபாளையத்தில் நடைபெற்றது.

சிறப்பு
விருந்தினர்களாக கோவை
மேக் குழுமத்தின் நிர்வாக
இயக்குநர் சரவணன் மாணிக்கம்,
விழுப்புரம் சரஸ்வதி பார்மா
இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முத்து சரவணன், ஆரணி
சன்டெக் எனர் கிரீன்
உரிமையாளர் திருநாவுக்கரசு, சென்னை
பேஸில் வித்
ட்விஸ்ட் உணவகம் பாகீரதி
ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிறுவனரும், பொறியாளருமான தில்லை
செந்தில்பிரபு தியானப்
பயிற்சி வழங்கினார்.

மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல, 2022ம் ஆண்டு
கல்வி உதவித் தொகை
பெற விரும்பும் மாணவர்கள்
info@anandachaitanya.org
என்ற
மின்னஞ்சலுக்கு தங்கள்
விவரங்களை அனுப்பலாம் அல்லது
www.anandachaitanya.org
என்ற
இணையதளத்தில் தரப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -