Friday, April 25, 2025
HomeBlogபெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி
- Advertisment -

பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி

Free cosmetic training for women

பெண்களுக்கான இலவச அழகுக்கலை
பயிற்சி

பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி இலவசமாக
அளிக்கப்பட உள்ளதாக, நாமக்கல் பயிற்சி நிறுவன
இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல்
இந்தியன் வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி, மார்ச்,
3
முதல், 30 வேலை நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இதில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள முதலில்
வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அது
சமயம், தங்களது விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், ரவின் பிளாசா,
திருச்சி சாலை, ரயில்வே
மேம்பாலம் அருகில், நாமக்கல்
என்ற முகவரியில் நேரில்
வந்து மார்ச், 3க்குள்
பூர்த்தி செய்து தரவேண்டும். விண்ணப்பதாரர், குறைந்த
பட்சம், 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18
வயதுக்கு மேற்பட்டும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்;
பயிற்சிக்கான செலவு,
சான்றிதழ், பயிற்சி பொருட்கள்,
தேநீர், சிற்றுண்டி, உணவு
என அனைத்தும் இலவசமாக
வழங்கப்படும்.

மேலும்
விவரங்களுக்கு, 04286-221004 என்ற
தொலைபேசி எண்ணிலும், 96989 96424,
88259 08170, 84892 79126
என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -