ஆனந்த சைதன்யா
அறக்கட்டளையின் கல்வி
உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை
குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் ‘கற்கை நன்றே‘ என்ற
கல்வி உதவித் திட்டம்
மூலம் ஏழை மாணவர்கள்
உயர்கல்வி படிப்பதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி,
2021-2022ம் கல்வியாண்டில் இந்தத்
திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர மற்றும் விடுதிக்கான உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது. அந்த மாணவர்களின் இரண்டாம் செமஸ்டருக்கான நிதி
வழங்கும் விழா குரும்பபாளையத்தில் நடைபெற்றது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சிறப்பு
விருந்தினர்களாக கோவை
மேக் குழுமத்தின் நிர்வாக
இயக்குநர் சரவணன் மாணிக்கம்,
விழுப்புரம் சரஸ்வதி பார்மா
இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முத்து சரவணன், ஆரணி
சன்டெக் எனர் கிரீன்
உரிமையாளர் திருநாவுக்கரசு, சென்னை
பேஸில் வித் எ
ட்விஸ்ட் உணவகம் பாகீரதி
ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிறுவனரும், பொறியாளருமான தில்லை
செந்தில்பிரபு தியானப்
பயிற்சி வழங்கினார்.
மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல, 2022ம் ஆண்டு
கல்வி உதவித் தொகை
பெற விரும்பும் மாணவர்கள்
info@anandachaitanya.org என்ற
மின்னஞ்சலுக்கு தங்கள்
விவரங்களை அனுப்பலாம் அல்லது
www.anandachaitanya.org என்ற
இணையதளத்தில் தரப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

