தொழிலாளர்களின் ஊதியம்
குறைய வாய்ப்பு? – புதிய
கொள்கை விளக்கம்
நாடு
முழுவதும் கொரோனா வைரஸின்
இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பல மாநிலங்கள் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக கடந்த
ஆண்டு மத்திய அரசால்,
2019 ஊதிய கோட்பாட்டின் கீழ்
தொழிலாளர் சீர்திருத்தங்களை செயல்படுத்த இயலவில்லை. முன்னதாக, இந்த
ஆண்டு ஏப்ரல் 1 முதல்
தொழிலாளர் சீர்திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
செய்திருந்தது. தற்போது
கொரோனா காரணமாக அந்த
முடிவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து தி எகனாமிக் டைம்ஸின் அறிக்கை கூறுகையில்:
தற்போதுள்ள நோய்த்தொற்று காரணமாக
பல மாநிலங்களில் சிக்கலான
சூழ்நிலைகள் காணப்படுகிறது. இதன்
காரணமாக அந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு தயாரிப்பு பணிகள் தாமதமாக
நடைபெறுகிறது. இருந்தாலும் தொழிலாளர் குறியீட்டை செயல்படுத்துவதால் இந்திய பெரு
நிறுவனங்களுக்கு ஏற்படும்
சிக்கல்கள் குறித்து தீர்மானிக்க அந்நிறுவனங்களுக்கு போதிய
கால அவகாசம் கிடைக்கும்.
மேலும்
புதிய ஊதிய கொள்கையை
அமல்படுத்துவதின் தாமதம்
காரணமாக, புதிய தொழிலாளர்
விதிகளின் கீழ் ஊழியர்களின் சம்பள கட்டமைப்புகளை மறுசீரமைக்க பெரு நிறுவனங்களுக்கு அதிக
நேரம் கிடைக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த கொள்கையை மத்திய
அரசு உடனடியாக செயல்படுத்துவது கடினம் என்பதால், இந்தியாவில் இந்த ஆண்டு புதிய
தொழிலாளர் விதிகள் நடைமுறைக்கு வராது என கூறப்படுகிறது.
இந்த
புதிய கொள்கை புதுப்பித்தலின் படி, ஏப்ரல் 1 முதல்
தொழில்துறை உறவுகள், ஊதியங்கள்,
சமூக பாதுகாப்பு மற்றும்
பாதுகாப்பு மற்றும் பணி
நிலைமைகள் ஆகிய நான்கு
தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்த மத்திய தொழிலாளர் அமைச்சகம்
திட்டமிட்டிருந்தது. அதன்
படி இந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் குறியீடுகள் தற்போதுள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களையும் தற்போது இணைத்துள்ளது.
புதிய
தொழிலாளர் குறியீடுகளின் கீழ்
ஒரு ஊழியரின் அடிப்படை
சம்பளம் சிடிசி.,யில்
குறைந்தது 50 சதவீதமாக இருக்க
வேண்டும். ஆனால் புதிய
தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைக்கு வரும்போது ஊழியர்களின் இழப்பீட்டு கட்டமைப்மாற்ற வேண்டும்.
ஆனால் தற்போதுள்ள ஊதிய
குறியீடுகளின் படி,
பல தொழிலாளர்கள் 50%க்கும்
குறைவான ஊதியங்களை பெற்று
வருவதால், இந்த புதிய
கொள்கை ஒரு கடினமாக
மாற்றமாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.