தமிழகத்தில் குடும்ப
தலைவிகளுக்கு மாதம்
ரூ.1000, ரேஷன் கார்டுகள்
விண்ணப்ப பதிவு உயர்வு
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில்
திமுக அமோக வெற்றி
பெற்றது. திமுக தலைவர்
ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது பல வாக்குறுதிகளை மகக்ளுக்கு அளித்தார். அதில்
குடும்ப தலைவிக்கு மாதம்
தோறும் ரூபாய் 1000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும்
கொரோனா நிவாரண நிதியாக
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000
வழங்கப்படும் என
அறிவித்திருந்தார். அதன்
படி முதல் தவணையாக
ரூ.2000 இந்த மாதம்
வழங்கப்படவுள்ளது.
இதனால்
குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை குறித்த அறிவிப்பும் விரைவில்
வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கோவை
மாவட்டத்தில் புதிய
ரேஷன் கார்டு கேட்டு
விண்ணப்பிப்போர் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது என
மாவட்ட வழங்கல் துறை
அதிகாரி தெரிவித்துள்ளார். புதிதாக
திருமணமான தம்பதியர், இதுவரை
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உள்ளிட்டோர், தற்போது ஆர்வத்துடன் இ–சேவை
மையங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இதை
தொடர்ந்து மேலும் புதிய
ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன
என தெரிவிக்கின்றார். மாதம்
சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் வருகின்றன.
மேலும் ஆன்லைன் மூலமாகவும் மக்கள் விண்ணபிக்கலாம் என்
அரசு தெரிவித்துள்ளது. கடந்த
அக்டோபர் முதல் ஜனவரி
வரையில் மாவட்டத்தில் 25 ஆயிரம்
புதிய ரேஷன் கார்டுகள்
விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது
7 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள்
விநியோகிக்கப்பட்டு வருகின்றன
எனவும் கோவை மாவட்ட
வழங்கல் துறை அதிகாரி
தெரிவித்துள்ளார்.