எந்த மாதத்தில்
என்னென்ன சாகுபடி செய்யலாம்
– தோட்டக்கலை துறை
பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்வதை,
அக்காலத்தில் பட்டங்களாக பிரித்து வைத்திருந்தனர். நவீன
விவசாய அறிவியலும், பட்டத்தை
ஏற்றுக் கொள்கிறது. அதன்படி,
எந்தெந்த மாதங்களில், என்ன
காய்கறி சாகுபடி செய்தால்,
அதிக மகசூல் கிடைக்கும் என, பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை:
பயிர்
சாகுபடியில் பருவநிலைகளை போல,
சந்தை நிலவரமும் முக்கியம்.
மாதவாரியான உள்நாடு மற்றும்
வெளிநாடு சந்தைத் தேவையினை
கருத்தில் கொண்டு பயிர்களைப் பயிரிட வேண்டும்.அதாவது,
அதிக லாபம் பெறும்
நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும்
பயிரிடுவது அவசியம். அந்த
வகையில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஏற்ற பயிர்கள் குறித்து
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜனவரியில்
(மார்கழி – தை) கத்தரி,
மிளகாய், தக்காளி, பூசணி,
சுரை, முள்ளங்கி, கீரைகள்
பிப்ரவரியில் கத்தரி, தக்காளி, மிளகாய்,
வெண்டை, சுரை, கொத்தவரை,
பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் சாகுபடி செய்யலாம்.
மார்ச்
வெண்டை, தக்காளி, கோவைக்காய், கொத்தவரை, பீர்க்கன்
ஏப்ரலில்
கொத்தவரை, வெண்டை
மே
மாதம் கத்தரி, தக்காளி,
கொத்தவரை
ஜூனில்
கத்தரி, தக்காளி, கோவை,
பூசணி, கீரைகள், வெண்டை,
செடி முருங்கை சாகுபடி
செய்ய வேண்டும்.
ஜூலையில்
மிளகாய், சுரை, பூசணி,
பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை,
கொத்தவரை, தக்காளி
ஆகஸ்ட்டில் முள்ளங்கி, பீர்க்கன், பாகல்,
மிளகாய், வெண்டை, சுரை
செப்டம்பரில் கத்தரி, முள்ளங்கி, கீரை,
பீர்க்கன், பூசணி
அக்டோபரில் கத்தரி, முள்ளங்கி சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும்.
நவம்பரில்
செடிமுருங்கை, கத்தரி,
தக்காளி, முள்ளங்கி, பூசணி
டிசம்பரில் (கார்த்திகை — மார்கழி) கத்தரி,
தக்காளி என்று மாதவாரியாக பயிரிடுவது பயிர் வளர்ச்சிக்கும், சந்தை விற்பனைக்கும் உதவும்.இவ்வாறு,
தெரிவிக்கப்பட்டுள்ளது.