மே மாதத்தில்
14 நாட்கள் வங்கிகள் இயங்காது
ரிசர்வ்
வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும்
உள்ள பொதுத்துறை, தனியார்
துறை, வெளிநாட்டு வங்கிகள்,
கூட்டுறவு வங்கிகள் மற்றும்
பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த
விடுமுறை நாட்கள் நாடு
முழுவதும் ஒரே மாதிரியாக
இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும்.
இருப்பினும், ஆன்லைன் வங்கி
சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே
இந்த வாரம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும்
முக்கியமான வேலை இருந்தால்,
விடுமுறை நாட்களை மனதில்
வைத்து உங்கள் வேலையைத்
திட்டமிட வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரிசர்வ்
வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, மே மாதத்தில்
மொத்தம் 14 விடுமுறை நாட்கள்
உள்ளன.. இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம்
மாறுபடும், ஏனெனில் இது
மாநில–குறிப்பிட்ட பண்டிகைகளை அடிப்படையாகக் கொண்டது.
தேசிய விடுமுறை நாட்களைத்
தவிர, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது
மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 – மே
தினம் – நாடு முழுவதும்
மே 2 – மகரிஷி
பரசுராம் ஜெயந்தி – பல
மாநிலங்கள்
மே 3 – இதுல்
பித்ர், பசவ ஜெயந்தி
(கர்நாடகா)
மே 4 – இதுல்
பித்ர் – தெலுங்கானா
மே 8 – ஞாயிறு
மே 9 – குரு
ரவீந்திரநாத் ஜெயந்தி
– மேற்கு வங்கம் மற்றும்
திரிபுரா
மே 13 – இதுல்
பித்ர் – தேசிய அளவில்
மே 14 – 2வது
சனிக்கிழமை வங்கி விடுமுறை
மே 15 – ஞாயிறு
மே 16 – மாநில
தினம், புத்த பூர்ணிமா
– சிக்கிம் மற்றும் பிற
மாநிலங்கள்
மே 22 – ஞாயிறு
மே 24 – காசி
நஸ்ருல் இஸ்லாம் பிறந்த
நாள் – சிக்கிம்
மே 28 – 4வது
சனிக்கிழமை
மே 29 – ஞாயிறு